
நாம் அனைவரும் வாழ்க்கையில் அடைய விரும்பும் பொருட்களில் சிலவற்றை இப்பொழுது பார்க்கலாம்: மிட்டாய், குளிர்பாலேடு, விலையுயர்ந்த கைக்கடிகாரம், புதிய தொழில்நுட்பம் வாய்ந்த கைபேசி, அதிநவீன நான்கு சக்கர வாகனம், சொகுசு மாளிகை, தனக்கென்று ஒரு பெரிய தொழிற்சாலை …….இப்படி இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
இது எங்கு முடியும் என்பதை யாராவது அறிவீர்களா? விடை: முடிவில்லாதது இந்த வகையான பொருட்களின் மீது வைக்கும் பற்றயே ஆசை என்று கூறுவார்.
குறிக்கோள் என்பது ஒரு சமூகத்துக்கு உயர்வை தரக்கூடிய தன்னலம் அற்ற செயலாகும்.
நம்மில் பலர் ஆசைக்கும குறிக்கோளுக்கும் இடையே உள்ள வேறுபாடை அறியாமல் ஆசையை குறிக்கோள் என கருதி வாழ்கின்றனர் .
நான் கேள்விப்பட்டிருக்கிறேன் சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சிறுவயதில் ஒரு சிந்தனையை விதைத்து அதனால் பெருந் துன்பப்படுகின்றனர். அது என்னவென்றால் “ நீ நன்றாக படித்தால் , உனக்கு நிறைய பணம் கொடுக்கும் பெரிய வேலை கிடைக்கும், அதனால் நீ நினைப்பதையெல்லாம் வாங்கி அனுபவிக்கலாம் “ என்பது.
நிறைய பெற்றோர் இந்த போதனையை சரி என்றே கருதுகின்றனர், உண்மையில் கல்வி என்பது” ஒரு குழந்தைக்கு நல்ல குணத்தையும், தான் கற்ற கல்வியை சமூக நலனுக்காக பயன்படுத்தும் அறிவை வழங்கக்கூடியது”. இதுவே கல்வியின் அடிப்படைக் கொள்கையாகும்.
பெற்றோர் அவதிப்படுவதர்க்கு காரணம் அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு குறிக்கோளுக்கு பதிலாக ஆசையை விதைத்ததுதான். இந்த குழந்தைகள் வளர்ந்ததும் பணத்தின் மேல் நாட்டம் கொண்டு வாழ்க்கையின் உண்மையை உணராமல், வாழ்க்கையும் தொலைத்து நிற்கின்றனர்.
ஆசைக்கும் குறிக்கோளுக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது, ஆயினும் இவ்விரண்டின் பின்விலைவுகள் பெரும் வேறுபாடு உள்ளது.
இதை உங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு கொண்டு விளக்குகிறேன்.
என்னை உதாரணத்திற்கு ஒரு எழுத்தாளராக எண்ணிக்கொல்லுங்கள் , நான் அடைய நினைக்கும் மாறுபட்ட பொருள் :
- “என் பதிவை 1000 மக்கள் லைக்ஸ் செய்ய வேண்டும். “
- “ என் பதிவுகள் மக்களுக்கு மேன்மை நிலையை அடைய உதவவேண்டும். “
இவ்விரண்டின் எது ஆசை, எது குறிக்கோள் என்று உணர முடிகிறதா? சற்று சிந்தியுங்கள்…..
இவ்விரண்டும் படிப்பதற்கு ஒன்றை போல் இருந்தாலும் உண்மையில் பெரிய வித்தியாசங்கள் நிறைந்தது.
இப்போது “ நான் 1000 லைக்ஸ் வாங்க வேண்டும்” என்றால் , என் சிந்தனைப் போக்கு எப்படி இருக்கும் என்பதை பார்ப்போம்.
- நான் இணையத்தளம் சென்று எந்த தலைப்பை மக்கள் அதிகம் தேடுகின்றனர் என்று பார்த்து அந்த தலைப்பை தேர்ந்தெடுப்பேன்.
- எனக்கு அந்த தலைப்பை பற்றிய அறிவோ, தெளிவோ இல்லாமல் அந்த பதிவை எழுதுவேன்.
- நான் தங்களை மகிழ்விக்க வேண்டும் என்பதை மட்டும் எண்ணி, முற்றிலும் வார்த்தைஜாலம் கொண்ட ஒரு தொகுப்பாகவே எழுதுவேன்.
- 1000 லைக்ஸ் வாங்க என் மனசாட்சியை கொல்ல வேண்டும்.
என் சமூக அந்தஸ்து எதிர்பார்ப்புகள்:
- அதிக பணம் சம்பாதிக்க வேண்டும்.
- எனக்கு என்று சமூகத்தில் ஒரு அடையாளம் கிடைக்க வேண்டும்.
- நான் விருதுகளுக்கு தகுதி அடைய வேண்டும்.
இந்த எண்ணத்தினால் வெளிப்படும் தாக்கம்:
என் பதிவில் அறிவு, ஞானம் இவ்விரண்டும் இல்லாமல், முற்றிலும் வார்த்தை ஜாலம் கொண்ட ஒரு தொகுப்பாகவே இருக்கும்.
என் சமூக அந்தஸ்து:
- நான் நான்கு சக்கர வாகனம் வாங்கி விடுவேன்.
- நிறைய மக்கள் என்னை அறிவார்கள்.
- எனக்கு விருதுகள் கிடைக்கும்.
• என் மனம் நிம்மதி இல்லாமல் தவிக்கும்.
இப்பொழுது “ மக்களுக்கு மேன்மை நிலையை அடைய உதவவேண்டும். “ என்று நினைக்கும்போது , எனது சிந்தனைப் போக்கு எப்படி இருக்கும் என்பதை பார்ப்போம்.
- நான் மக்களுக்கு நடப்பு சூழலில் எந்த தலைப்பு உகந்ததாக இருக்கும் என்று சிந்தித்து அந்த தலைப்பை தேர்வு செய்வேன்.
- பின்னர் அந்த தலைப்பை பற்றி ஆராய்ந்து அறிந்து தொலைநோக்கு பார்வையுடன் எழுதுவேன்.
- என் தொகுப்பில் வார்த்தை ஜாலம் இல்லாமல், மக்களின் துயர் கலைந்து மேன்மை நிலையை அடைய உதவும் வகையில் எழுதுவேன் .
- நான் என் மனசாட்சியை கொல்ல மாட்டேன்.
நான் சமுக அந்தஸ்தில் பெற நினைப்பது:
- பணம் பெருக்கும் எண்ணம் இருக்காது.
- எனக்கு சமூக அடையாளம் பற்றிய கவலை இல்லை
- எனக்கு விருதுகள் வாங்கும் நோக்கம் கிடையாது.
இந்த எண்ணத்தினால் வெளிப்படும் தாக்கம் :
என் பதிவு தொலைநோக்கு பார்வையுடன் , மக்களின் துயர் கலைந்து, மேன்மை நிலையை அடைய உதவும்.
என் சமூக அந்தஸ்து:
- என்னால் வண்டி வாங்க முடியாது இருப்பினும் நான் தூரங்களை கால்களால் கடப்பேன், இது என் உடலுக்கு நல்லது.
- என்னை யாரும் அறிய மாட்டார்கள் ஆனால் சில உள்ளங்கள் என்னை மறவாமல் போற்றும்.
- எனக்கு விருதுகள் கிடைக்காது ஆனால் நல்ல செயல் புரிந்தேன் என்ற பெருமிதம் இருக்கும்.
• எல்லாவற்றுக்கும் மேலாக மன நிம்மதி கிட்டும்.
இப்பொழுது அனைவரும் அறிந்துகொள்ள முடியும், “ 1000 லைக்ஸ் “ என்பது ஆசை. “ மக்களின் மேன்மைக்காக எழுதுவது” என்பது குறிக்கோள்.
உங்களுக்காக ஆசைக்கும் குறிக்கோளுக்கும் உள்ள சில வேறுபாடுகள்:
• குறிக்கோள்: பதவியையோ, பணத்தையோ தருவதைவிட மனநிம்மதியை கொடுக்கும்.
ஆசை: மனநிம்மதியை பறித்து பதவியையும், பணத்தையும் வழங்கும்.
• குறிக்கோள்: சமூகத்துக்கு நன்மை பயக்கும்.
ஆசை: தனக்கும் தன் குடும்பத்திற்கும் மட்டும் நன்மை செய்யும்
• குறிக்கோள்: உங்கள் மனதை கருணை, அன்பு போன்ற எண்ணங்களால் நிறைந்து இருக்கும்.
ஆசை: உங்கள் மனதை பேராசை, பொறாமை போன்ற எண்ணங்களாளல் நிறைந்து இருக்கும்.
• குறிக்கோள்: உங்கள் சிந்தனை வளத்தை மேம்படுத்தும்.
ஆசை: உங்கள் சிந்தனை வளத்தை குறைக்கும்.
இந்த பதிவு ஆசைக்கும் குறிக்கோளுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை அறிய உதவியிருக்கும் என நம்புகிறேன்.
“ ஆசையே பாவங்களுக்கெல்லாம் தாய், தந்தை “ என்று புத்தர் கூறிய பொன் மொழியை நினைவு படுத்தி முடிக்கிறேன்.
Ps:
இப்பதிவில் எனக்கு எழுத்துப் பிழைகளை நீக்க உதவிய Mrs Supraja Balaji and Mrs Sowmya Jayachandar க்கு என் உளங்கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
